பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பான புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு

அரியலூர்மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு.

Update: 2022-01-04 06:54 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்,

அரியலூர் மாவட்டத்தில் இன்று (ஜன 04) முதல் ரேஷன் கடைகளில் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்கள் இருந்தால் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

2022 ம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மளிகை மற்றும் கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இன்று (ஜன 4) முதல் வழங்கப்படுகிறது.

இதில், அரியலூர் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 2,42,495 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும். ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு நபர் மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் மற்றும் மின்னணு ரேஷன் கார்டை எடுத்துச் சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், அரசு அறிவித்துள்ள கரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்கள் இருப்பின் வட்ட வழங்கல் அலுவலர்கள் அரியலூர் - 9445000274, உடையார்பாளையம் - 9445000275, செந்துறை - 9445000276, ஆண்டிமடம் - 9786601173 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

Tags:    

Similar News