நீட்தேர்வு தடைசட்டத்தை தமிழகஅரசு அமல்படுத்த வேண்டும்: திருமாவளவன்

அங்கனூர் கிராமத்தில் தனது தந்தையின் நினைவு நாளையொட்டி, மலர்தூவி தொல்.திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2021-07-15 06:48 GMT

அங்கனூர் கிராமத்தில் தனது தந்தையின் நினைவு நாளையொட்டி மலர்தூவி தொல்.திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் தனது தந்தையின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்த ஏ கே ராஜன் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. இதில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு 2007 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு வேண்டாம் என கடந்த திமுக ஆட்சியில் தடை சட்டம் கொண்டு வந்து, நுழைவுத்தேர்வை ரத்து செய்ததை போல் நீட் தேர்விற்கும் தடைச்சட்டம் கொண்டு வந்து, நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களின் எண்ணத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்கும் என நினைக்கிறோம். நாளை அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நான் கலந்து கொள்கிறேன். தமிழக மக்கள் நலன்கருதி பிரதமர் மோடி கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும். மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது. கொரோனா தொற்று ஆபத்தானது, எனவே எனவே பள்ளி திறப்பதில் அவசரம் தேவை இல்லை என்பது விடுதலை சிறுத்தையின் வேண்டுகோள் என திருமாவளவன் தெரிவித்தார்.


Tags:    

Similar News