அரியலூர் மாவட்டத்தில் வேப்ப மரம் வெட்டிய தகராறில் 6 பேர் மீது வழக்கு

அரியலூர் மாவட்டத்தில் வேப்பமரம் வெட்டிய தகராறு தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-11-14 09:02 GMT
சித்தரிக்கப்பட்ட படம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே தெற்கு நரியங்குழி கிராமம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சாமிதுரை ( 53) விவசாயி.அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (55) விவசாயி. இவர்கள் இருவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ராஜலிங்கம் மற்றும் சாமிதுரை இருவருக்கும் பொதுவான வேப்ப மரத்தில் ராஜலிங்கம் தழை வெட்டியதாக கூறப்படுகிறது. அப்பொழுது சாமிதுரை இருவருக்கும் பொதுவான மரத்தில் தழை வெட்ட கூடாது என்று கூறியுள்ளார். இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு வந்த ராஜலிங்கம் மனைவி வளர்மதி மகன் ராஜ்குமார் மற்றும் சாமிதுரை இவரது மகன் சின்னதுரை உறவினர் பழனிச்சாமி ஆகியோரும் அங்கு வந்துள்ளனர். அப்பொழுது மீண்டும் இவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்பு வாய்த்தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் ராஜலிங்கம் மற்றும் சாமிதுரை கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கருணாநிதி  ராஜலிங்கம், வளர்மதி , ராஜ்குமார், சாமிதுரை, சின்னதுரை, பழனிச்சாமி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News