தேசிய புதை உயிரிப்படிவ தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

அரியலூரில் தேசியபுதை உயிரிப்படிவ தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

Update: 2021-10-14 05:42 GMT

தேசிய புதை உயிரிப் படிவதின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  பரிசுகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.


அரியலூர் மாவட்டம் வாரணவாசி புதை உயிரிப் படிவ அருங்காட்சியக துறை சார்பில், தேசிய புதை உயிரிப் படிவ தினத்தினை முன்னிட்டு, வாரணவாசி அரசு உயர் நிலைப் பள்ளியில் அரியலூர் மாவட்ட புதை உயிரிப் படிவங்களின் முக்கியத்துவத்தினை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக "அரியலூர் மாவட்ட புதைப் படிவங்கள்" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சென்னையினை சேர்ந்த இளம் தொல் உயிரி ஆராய்ச்சியாளர்  அஸ்வதா பிஜீ மாணவர்களுக்கிடையே அரியலூர் தொல் உயிர் படிவங்கள் சிறப்புகள் தொடர்பாக உரையாற்றினார்.

பின் நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

புதை உயிரிப் படிவ தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவர்கள் மற்றும் இந்த நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர் இளம் தொல் உயிர் ஆராய்ச்சியாளர் செல்வி.அஸ்வதா பிஜீக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

இந்த நிகழ்வில் அரியலூர் புதை உயிரிப் படிவ அருங்காட்சியக காப்பாட்சியர் சி.சிவகுமார், வாரணவாசி அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அ.சரவண ராஜா மற்றும் அறிவியல் ஆசிரியர் ம.உமா மகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News