கொலை வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு

கூலித்தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Update: 2022-02-16 11:30 GMT

10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட கண்ணன் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேயுள்ள காங்கேயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சௌந்திரராஜன்(42). கூலித்தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னப்பா மகன் கண்ணன்(52) என்பருக்கும் இடையே கடந்த 13.06.2019 அன்று ஏற்பட்ட முன் விரோதத் தகராறில் சௌந்திரராஜனை கண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி மகாலட்சுமி, குற்றவாளி கண்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து  தீர்ப்பளித்தார். இதையடுத்து கண்ணன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News