அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் லாரிகளால் சேறும் சகதியுமான சாலை

அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் லாரிகளால் சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக மாற்றம் அடைந்துள்ளது.

Update: 2021-10-14 06:02 GMT

அரியலூர் மாவட்டத்தில்  சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் லாரிகளால் சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது.


அரியலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் மழை பெய்து வருகிறது. மழை பெய்யும் போது சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் லாரிகளால் சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக மாற்றம் அடைந்துள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் வாகன விபத்துகள் நிகழும் சூழல்கள் உள்ளன.

குறிப்பாக அரியலூர் - ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் அஸ்தினாபுரம் முதல் வி.கைகாட்டி வரை சாலை மிகவும் சேறும் சகதியுமாக அதாவது வயல் வெளி போல் காட்சி அளிக்கிறது.

எனவே அரியலூர் மாவட்ட மக்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும், மழைக்காலங்களில் சேறும்சகதியுமாக உள்ள சாலைகளில் அவற்றை உடனுக்குடன் சுத்தம் செய்ய சம்ப ந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்திரவிடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News