சிறுபான்மையின மக்கள் பசுமை வீடு பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

வழிகாட்டு நெறிமுறைகளின்படி மொத்த ஒதுக்கீட்டில் 15 சதவிகிதம் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட வேண்டும்.

Update: 2021-10-07 04:45 GMT

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் குடியிருப்புத்திட்டம் (ஊரகம்) மற்றும் பசுமை வீடு திட்டங்களின் கீழ் தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் மற்றும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) வழிகாட்டு நெறிமுறைகளின்படி மொத்த ஒதுக்கீட்டில் 15 சதவிகிதம் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட வேண்டும். எனவே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் (இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்தவர்கள்) சம்மந்தப்பட்ட ஊரக பஞ்சாயத்து மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களை தொடர்பு கொண்டு மேற்படி திட்டங்களின்கீழ் விண்ணப்பித்து பயன்பெறும்படி அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News