700 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய 700 தொழிலாளர்களுக்கு ரூ.10லட்சம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

Update: 2021-07-30 09:26 GMT

தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற 700 தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.


அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற 700 தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.

அதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டத்தில் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 472 தொழிலாளர்களுக்கு மாதந்திர ஓய்வூதியமாக ரூ.6,35,000/-ம், 207 தொழிலாளர்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.4,06,200/-ம், 8 தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவி தொகையாக ரூ.2,00,000/-ம், 12 தொழிலாளர்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ.58,000/-ம் மற்றும் 1 தொழிலாளிக்கு மகப்பேறு உதவி தொகையாக ரூ.3,000/-ம் என மொத்தம் 700 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவியாக 13,02,200/- வழங்கப்படுகிறது.

எனவே, தொழிலாளர்கள் அனைவரும் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சந்திரசேகர், தொழிலாளர் உதவி ஆணையர் விமலா, கண்காணிப்பாளர் நூருல்லா அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News