அரியலூர் மாவட்டத்தில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகளை அமைச்சர் வழங்கினார்

அரியலூர் மாவட்டத்தில் அச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

Update: 2022-01-12 11:37 GMT

அரியலூர் மாவட்டத்தில் கோவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் திருக்கோயில் அச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் ரூ.10 கோடி செலவில் அச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை கடலூர் மண்டலம், அரியலூர் மாவட்டத்தில் 32 திருக்கோயில்களில் பணிபுரியும் 60 அர்ச்சகர்கள், 83 திருக்கோயில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று வழங்கினார்.

தொடர்ந்து, வருவாய்த்துறையின் சார்பில் இ-சேவை மையத்தில் பதிவுசெய்த 10 நபர்களுக்கு இ-பட்டாக்களையும், தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,82,105 சேலைகள், 1,81,498 வேட்டிகள் என மொத்தம் 3,63,603 இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் பொருட்டு 10 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியர் ஏழுமலை, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் மாரியப்பன், வட்டாட்சியர் ராஜமூர்த்தி, ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News