8 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை வழங்கிய அமைச்சர்

அரியலூர் மாவட்டத்தில் 8 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

Update: 2021-09-05 09:32 GMT

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 8ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.


அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் கல்விப் பணிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விழாவில், கீழப்பழூர் அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் 7 ஆசிரியர்கள் என மொத்தம் 8 நபர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், கீழப்பழூர் அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர்.க.மொழியரசி அவர்களுக்கு ரூ.10,000 பரிசுத்தொகையுடன் பாராட்டுச்சான்றிதழும், திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தி.இன்பராணி, சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தி.பாண்டியன், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் பி.அழகுதுரை,

மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அ.அந்தோணிசாமி செழியன், அண்ணிமங்கலம் ஆதிதிராவிடர் நலத்தொடக்க பள்ளி தலைமையாசிரியர் ப.பிரபா, மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தொடக்க பள்ளி தலைமையாசிரியர் சிவமூர்த்தி,

புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் ஆகியோர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னூலாப்தீன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், முதன்மை கல்வி அலுவலர் எம்.இராமன், மாவட்ட கல்வி அலுவலர் பெ.அம்பிகாபதி, பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News