அரியலூரில் மியாவாக்கி முறையில் அடர்வனகாடு உருவாக்கும் பணி, அமைச்சர் தொடங்கிவைத்தார்

அரியலூர் எருத்துக்காரன்பட்டியில் மியாவாக்கி முறையில் அடர்வனகாடு உருவாக்கும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-07-17 06:38 GMT

அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டியில் மியாவாக்கி முறையில் அடர்வன காடுகள் உருவாக்கும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்.

அரியலூர் மாவட்டம், எருத்துக்காரன்பட்டி கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் அருள்மிகு ஆலந்துறையார் கோதாண்டராமசாமி திருக்கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தை பசுமையாக்கிடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் தமிழக முன்னாள் முதலமைச்சார் பிறந்தநாளான ஜீன் 3 அன்று வனத்துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தை பசுமையாக்கும் நோக்கில், எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில் தன்னார்வ அமைப்பின் ஒத்துழைப்புடன் மியாவாக்கி முறையில் தேக்கு, இலுப்பை, நாவல், புங்கன், வேம்பு, ஆலமரம், அத்தி உள்ளிட்ட 30 வகையான மரக்கன்றுகளும், மஞ்சள் அரளி, செம்பருத்தி, குண்டுமல்லி, செண்பகம், நந்தியாவெட்டை உள்ளிட்ட 10 வகையான செடிகளும் என மொத்தம் 7590 கன்றுகள் நடப்படுகின்றன.

இப்பணிகள் அனைத்தும் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுத்து காலாவதியான ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் இதுபோன்ற மியவாக்கி முறையில் குருங்காடுகள் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும் மரங்களை வளர்த்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தை பசுமையாத்திடும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், இந்திய சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அசோக்குமார், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், ஜெயராஜ், செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News