மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

ஜெயங்கொண்டம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.

Update: 2022-04-19 12:45 GMT

ஜெயங்கொண்டம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டார வளமையத்தில்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின்கீழ்,  மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிலெட்சுமி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச்செல்வி கலந்து கொண்டார். ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) கண்ணதாசன், சுதா உடனிருந்தனர்.

இம்முகாமில், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உபகரணம் தேவைப்படும் மாற்றுத்திறனுடைய மாணவ மாணவிகளுக்கு அலிம்கோ (Alimco) நிறுவனத்தால் கால் ஏற்ற இரக்கத்திற்கான காலணி, காது கேட்கும் கருவி, சக்கர நாற்காலி, செயற்கை கை, கால் என 40 குழந்தைகளுக்கு அளவீடு எடுக்கப்பட்டது. முகாமில் ஆசிரியர் பயிற்றுநர்கள் குறிஞ்சிதேவி, அந்தோணி லூர்து சேவியர், ஐயப்பன், அன்பரசன், சரவணன், இளையராஜா, தாமோதரன், செந்தில்குமார், டேவிட் ஆரோக்கியராஜ் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News