அரியலூர் நகராட்சியில் தூய்மைப்பணி: ஒட்டுமொத்த மஞ்சப்பை இயக்கம்

அரியலூர் நகராட்சியில் தூய்மை பணி 08.04.2022 மற்றும் 09.04.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

Update: 2022-04-02 06:00 GMT

அரியலூரில் ஆங்காங்கே காணப்படும் குப்பைகள். 

இது தொடர்பாக, அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்,  மீண்டும் நகராட்சியில் ஒட்டுமொத்த மஞ்சப்பை இயக்கத்தின்கீழ், அரியலூரில்  தூய்மை பணி 08.04.2022 மற்றும் 09.04.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.  அரியலூர் நகராட்சி பகுதி முழுவதும் முழு தூய்மைபணி மற்றும் சுகாதாரபணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அரியலூர் நகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றிற்கு இவ்வியக்கத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

மேலும் பிளாஸ்டிக் இல்லா அரியலூரை உருவாக்கும் முயற்சியாக நகராட்சியின் அனைத்து பகுதிளிலும் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதோடு, பொதுமக்களிடம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் தீமைகள் குறித்தும், அவற்றுக்கு பதிலாக, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டியதின் அவசியம் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இவ்வியக்கத்தில் ஆர்வத்துடன் பங்கு கொள்ள இருக்கும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாராட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் தங்கள் பகுதிகளில் தூய்மையை மேம்படுத்தி தக்க வைத்துக் கொள்ளும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தூய்மை பாதுகாவலர் என்ற பட்டமும், சுழற்சி கேடயமும் வழங்கப்பட உள்ளது. எனவே மேற்படி தூயமை பணி இயக்கத்தில் பங்கு கொண்டு, தூய்மையான மற்றும் பிளாஸ்டிக் இல்லா அரியலூரை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags:    

Similar News