கீழ் கொள்ளிடம் உப வடிநிலப்பகுதி நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்

கீழ் கொள்ளிடம் உப வடிநிலப்பகுதிகளில் நீரினை பயன்படுத்துவோர் சங்கதேர்தல் பற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2022-06-22 07:58 GMT

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் ஆனைவாரி ஓடை மற்றும் கீழ்கொள்ளிடம் உபவடிநிலப்பகுதிகளில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள், ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்புமனு படிவங்கள் வழங்கப்படும். அந்தந்த வட்டங்களின் கோட்டாட்சியர்கள் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடமிருந்து வேட்புமனுக்கள் வரும் ஜூன் 24-ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை பெறப்படும். செல்திறன் உள்ள வேட்புமனுக்களின் பட்டியல் வரும் 28-ஆம் தேதி வெளியிடப்படும்.

வேட்பமனுக்களை திரும்ப பெற அன்றே கடைசி நாளாகும். போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்தல், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு பணி அன்று மாலை 4.00 மணிக்கு மேல் நடைபெறும். வாக்குப்பதிவு தேவைப்பட்டால் ஜூலை 3-ஆம் தேதி காலை 7.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறும். அன்று மாலை 4.00 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலில் போட்டியிட விரும்பும் நில உரிமைதாரர்கள் தலைவர் பதவிக்கு ரூ.300, ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர் பதவிக்கு ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்கலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News