அரியலூர்: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில பார்வையாளர் ஆலோசனை

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக மாநில பார்வையாளர் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-09-29 06:07 GMT

அரியலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து தேர்தல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் ஆலோசனை  நடத்தினார்.


அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஜீன்  காலி பதவியிடங்களுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ம் தேதி  நடைபெற உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் சுமுகமாகவும், நேர்மையாகவும் நடைபெற தேர்தல் பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் மேஷ்ராம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இவர், தேர்தல் தொடர்பான பணிகளை அடுத்தமாதம் 12-ம் தேதி வரை கண்காணித்திட அரியலூருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் அரியலூர் மாவட்ட விருந்தினர் மாளிகையில் ஊரக உள்ளாட்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து தேர்தல் பார்வையாளர் அனில் மேஷராம், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) ஆகியோர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

மேலும் பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தங்களது புகார்கள் மற்றும் ஆட்சேபனைகளை, தேர்தல் பார்வையாளரின் 7402905800 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News