சிங்கராயபுரம் ஜல்லிக்கட்டில் 30 பேர் காயம்

சிங்கராயபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள்முட்டியதில் 30 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-04-23 12:03 GMT

அரியலூர் மாவட்டம் சிங்கராயபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த சிங்கராயபுரம் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலய பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு  நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சாவூர், கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 650 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 300 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த புனித அந்தோனியர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையிலான 100 க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் காளைகள் முட்டியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 30 பேர் லேசான காயமடைந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், கட்டில், மின்விசிறி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News