மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நலத்திட்டஉதவிகள் கலெக்டர் வழங்கல்

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

Update: 2022-01-11 08:55 GMT

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகளை  கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.


அரியலூர் மாவட்டம், மணக்கால் கிராமத்தை சார்ந்த கருணாநிதி முத்துலெட்சுமி தம்பதியினரின் மூன்றாவது மகன் செல்வன்.கருப்பசாமி கடந்த ஏப்ரல் மாதம் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்மாற்றியில் கைப்பட்டதில் பலத்த காயம் அடைந்தார். பல மாத மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் கருப்பசாமியின் வலது கை அகற்றப்பட வேண்டும் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கருப்பசாமியின் தந்தை கருணாநிதி கடந்த ஆண்டு  மாவட்ட ஆட்சித்தலைவர்  பொது மக்கள் குறைதீற்கும் கூட்ட நாளில் தன் மகனுக்கு செயற்கை கை பெருத்த வேண்டி மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள செயற்கை கை செய்யும் நிறுவனமான சன் ஆர்த்தோடிக்ஸ் மற்றும் ரிஹாப் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரும் முடநீக்கு வல்லுனரான கே.ஜெயவேல்  செல்வன் கருப்பசாமிக்கு பரிசோதித்து செயற்கை கை அளவீடு முதலிய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கருப்பசாமிக்கு வெளிநாட்டிலிருந்து பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட ரூ.65,000/- மதிப்பிலான அதிநவீன செய்ற்கை கை வர வைக்கப்பட்டு அரியலூர் மாவட்ட கலெக்டரால் கருப்பசாமிக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கருப்பசாமியும் அவரது தந்தையும் மாவட்ட கலெக்டருக்கு  நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின் போது 25 காது கேளாத மாற்றுத்திறனாளிக்கு ரூ.40,750/- மதிப்பிலான காதொலி கருவியும் மற்றும் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வமான பாதுகாவலர் நியமன சான்றிதழ் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்நுலாப்தீன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்ச.சீனிவாசன், குளோபல் நிறுவனத்தின் தலைவர் குமுதம், சமூக பணியாளர் கங்கா, பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் செ.பாலகிருஷ்ணன், குழு உறுப்பினர் அன்பழகன் மற்றும் அரசு அலுவலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News