அரியலூருக்கு ரூ 10 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் இந்தோனேசியா தமிழ் சங்கம் வழங்கல்

அரியலூர் கலெக்டர் ரத்னாவிடம், இந்தோனேசியா தமிழ் சங்கம் ரூ 10 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கியது

Update: 2021-06-01 16:04 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் ரூ 10 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்களை இந்தோனேசியா தமிழ் சங்கம் வழங்கியது.

தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இந்தோனேசியா தமிழ் சங்கம் சார்பில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி,

, 8330 ஜோடி கையுறைகளும், 1100  முதியோர் டையபர்களும், 1000  ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் போர்வை மற்றும் தலையணை உறைகளும் என ரூ.10 இலட்சம் மதிப்பிலான கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ரத்னாவிடம் வழங்கினார்

 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளை வழங்கிய அமைப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், இந்தோனேசியா தமிழ் சங்க உறுப்பினர்கள் வெங்டேஸ்வர், மணிமாறன், மயில்சாமி கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News