அரியலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா

அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டகுழு உறுப்பினர் டி. தண்டபாணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

Update: 2022-08-15 10:53 GMT

அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகம் முன்பு சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது.  விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் ஒன்றிய செயலாளர் து.பாண்டியன் முன்னிலை வகிக்க , ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டகுழு உறுப்பினருமான டி. தண்டபாணி  தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டகுழு உறுப்பினருமான டி. தண்டபாணி பேசுகையில் இந்தியாவை அடிமைப்படுத்தி வந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை வெளியேற்றிட நமது முன்னோர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் போராடி பல இன்னுயிர்களை தியாகம் செய்து போராடி பெற்ற இந்திய சுதந்திரம் 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்று வகுப்புவாத பாசிசம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற சமூக மற்றும் வாழ்க்கை நெருக்கடி சூழ்நிலையில் மக்கள் அவதியுற்று வரும் இன்னல்களை போக்கிட சுதந்திர தினமான இன்றைய தினத்தில் அனைவரும் சபதமேற்போம் என்று கூறினார்.

விழா நிகழ்ச்சியில் சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சொ. ராமநாதன், திருமானூர் ஜி. ஆறுமுகம், மு.கனகராஜ், அரியலூர் நகரம் மகளிர் சுய உதவி குழு பொ.சின்னப்பொண்ணு ,பெ.லட்சுமி,க. அமிர்தம்,க.சுபர்னா ,கு.வெள்ளையம்மாள், ஆர். காமாட்சி, அபினயபாரதி, இளைஞர் பெருமன்றம் ஆர்.ஆனந்து, கு,விக்னேஷ்,ஆர். கேசவன்,நந்தா அரியலூர் நகராட்சி மா. ராமசாமி அரியலூர் நகரக் கிளை ந. கோவிந்தசாமி உள்பட பலர் திரளாக கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News