அரியலூர் தரைப்பாலத்தினை உயர்மட்ட பாலமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரியலூர் கீழப்பழுவூர்- திருமழபாடி செல்லும் சாலை தரைப்பாலத்தினை உயர்மட்ட பாலமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-12-17 12:09 GMT

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர்- திருமழ பாடி தரைப்பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர்- திருமழபாடி செல்லும் சாலையில் வண்ணம் புத்தூர் கிராமத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சாலையில் பலஆண்டுகளாக தரைப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியே சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். இப்பாலத்தினை உயர்மட்ட பாலமாக உயர்த்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை நடவடிக்கை இல்லை.

சாதாரண மழைக்கே காட்டு வெள்ளம் வந்து இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த பாலம் இருப்பதே தெரியாதது போல ஆழமாக இருப்பதால் புதிதாக இந்த சாலையில் வருபவர்கள் விபத்துக்குள்ளாவதும் தொடர்கதையாகி வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விரைவாக மேம்பாலமாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News