அரியலூர் காசி விசுவநாதர் கோயிலில் தங்க தேரோட்டம்

அரயலூர் காசி விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

Update: 2021-09-18 14:43 GMT

அரியலூர் காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோயில் தங்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.


அரியலூர் நகரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. புகழ்பெற்ற இக்கோயிலில் பக்தர்கள் அளித்த நன்கொடையில் 6அடி உயரமுள்ள தங்கத்தேர் செய்யப்பட்டது.

இன்று சனிபிரதோஷத்தை முன்னிட்டு காசி விஸ்வநாதர் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரில் காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் வீற்றிருக்க தங்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. காசிவிஸ்வநாதர் கோயிலை 3முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

தங்கதேரை பொதுமக்கள் இழுத்து, காசிவிஸ்வநாதரை பரவசமாக வணங்கி, ஓம்நமசிவாயா ,ஓம்நமசிவாயா என்று கோஷமிட்டு சுவாமியை வழிபட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் முதன்முதலாக தங்கத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது இக்கோவிலில்தான் என்பதும், அதன் தேரோ£ட்டம் பிரதோஷ தினமான இன்று நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News