அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படுவதாக கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவித்து உள்ளார்.

Update: 2021-09-24 06:04 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு கீழப்பழூர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் டூவிலர் மெக்கானிக், வெல்டிங் மற்றும் பேபிரிகேஷன் பயிற்சி, சி.சி.டி.வி.இன்ஸ்டாலேசன் பயிற்சி போன்ற பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பயிற்சி எவ்வித கட்டணமின்றி 100 சதவீதம் செய்முறை பயிற்சி, சீருடை, மூன்று வேலையும் உணவு, தேநீர், விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். திறன் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

இப்பயிற்சிகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதால் பயிற்சிகளுக்கான முன்பதிவு 01.10.2021 வரை நேரிலோ அல்லது 9842337565, 9944850442, 7539960190, 9626497684, 7904202360 ஆகிய தொலை பேசி மூலமாகவோ செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சிக்கு வயது 18 முதல் 45 வயது வரை மற்றும் கல்வி தகுதி எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் :- ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகர், மாற்று சான்றிதழ் நகல், 100 நாள் வேலை அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4.

மேலும், விவசாயம், உற்பத்தி, சேவை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News