அரியலூரில் டூவீலர் மெக்கானிக் வேலைக்கு இலவச பயிற்சி- இன்று நேர்காணல்

அரியலூரில் டூவீலர் மெக்கானிக் வேலைக்கான இலவச பயிற்சிக்கு நேர்காணல் இன்று நடைபெறுகிறது.

Update: 2022-04-08 05:29 GMT
பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில், டூவிலர் மெக்கானிக் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. எவ்வித கட்டணமும் இன்றி 100 சதவீதம் செய்முறை பயிற்சி, சீருடை, மூன்று வேளையும் உணவு, தேநீர், விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். திறன் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

நேர்காணல் தேதி: 08-04-2022, பயிற்சி தொடங்கும் நாள்: 11-04-2022

வயது வரம்பு:18 முதல் 45 வயது வரை கல்வி தகுதி: எழுத, படிக்க தெரிந்தால் போதும்

தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு நகல், ரேசன் கார்டு நகல், மாற்று சான்றிதழ் நகல் (டிசி), 100 நாள் வேலை அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 4

தொடர்புக்கு: 9842337565, 9626497684, 7804202360

இத்தொடர்பான விவரங்களுக்கு இயக்குநர், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், திருச்சி மெயின் ரோடு, கீழப்பழுர், அரியலூர்-621707. 04329-250173 அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News