நான்குவழி சாலை விரிவு: வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று மனைப்பட்டா வழங்ககோரி மனு

நான்கு வழிசாலை விரிவுபடுத்துவதற்காக வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று மனைப்பட்டா வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு.

Update: 2021-11-26 06:49 GMT

மாற்று மனைப்பட்டா வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த பொதுமக்கள்.


அரியலூர் மாவட்டம் சின்னவளையம் கிராம மக்கள் நான்கு வழி சாலை விரிவுபடுத்துவதற்காக தங்களது வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று மனைப்பட்டா வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அக்கோரிக்கை மனுவில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்திற்கு உட்பட்ட சின்னவளையம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். சிதம்பரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளின்போது, சின்னவளையம் கிராமத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக சுமார் 30க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக வீடுகட்டி குடியிருந்த எங்களின் வீடுகள் கடந்த மாதம் இடிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் வாடகைக்கு இடம் கிடைக்காமல், மாற்று இடம் கிடைக்காமல் தவித்து வருகிறோம். எனவே எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி, குடிமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுமார் 15 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேரில் வந்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

Tags:    

Similar News