அரியலூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி காவல் துறையினர் கொடி அணிவகுப்பு

அரியலூர் நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவல் துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Update: 2022-08-29 12:54 GMT

அரியலூர் நகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவல் துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.


வரும் 31ஆம் தேதி புதன்கிழமையன்று  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து பக்தர்கள் கோவில்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், கரைப்பதற்கும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், காவல்துறை சார்பிலும், சில சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடும் விதமாக காவல்துறையினரின் கொடி அணிவிப்பு நிகழ்ச்சி அரியலூர் நகரில் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரேஸ் கான் அப்துல்லா கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். ஒற்றுமை திடலில் இருந்து தொடங்கிய கொடி அணிவிப்பு தஞ்சாவூர் சாலை, வெள்ளாளர் தெரு, மங்கா பிள்ளையார் கோவில் தெரு, மார்க்கெட் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்று அண்ணா சிலையை அடைந்தது. கொடி அணிவிப்பில் ஆயுதப் படையினர், அதிரடி படையினர், காவல் துறையினர் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். வஜ்ரா உள்ளிட்ட வாகனங்களும் கொடி அணிவிப்பில் பங்கேற்றது.

மக்கள் எந்த வித அச்சமும் இன்றி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடவும், விநாயகர் சிலைகளை பாதுகாப்பாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுத்துள்ளதை பொது மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த  கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

Tags:    

Similar News