தமிழ்நாடு சிமெண்ட்ஸ் விரிவாக்கத்திற்கான கருத்து கேட்புக்கூட்டம்

கருத்து கேட்புக்கூட்டத்தில் கிராமத்திற்கு தேவையான அடிப்படைவசதிகள் குறித்து மாவட்டஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கைஅளித்தனர்.

Update: 2022-05-05 08:32 GMT

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் லிமிடெட், விரிவாக்கத்திற்கான கருத்துக்கேட்புக்கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் லிமிடெட், அரசாணை எண்.344, அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கல்லங்குறிச்சி, அமீனாபாத் மற்றும் கயர்லாபாத் கிராமத்தில், சுண்ணாம்புக்கல் சுரங்கம் 240.61 ஹெக்டேர் விரிவாக்கம் செய்ய உத்தேசித்துள்ளது.

இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்டுணரும் கூட்டம் தமிழ்நாடு சிமெண்ட் கழகம் கயர்லாபாத் கிராமம் அரியலூர் சிமெண்ட் ஆலை வளாகம் சமுதாயக் கூடத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் இன்று (05.05.2022) நடைபெற்றது.

மேலும் இக்கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மாசுக்கட்டுபாடுகள் குறித்தும் மற்றும் கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்களின் கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்களை பதிவு செய்தார்கள். பின்னர் இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், இத்திட்டம் செயல்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொது மக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, புதுதில்லி மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சக அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (பொ) வெங்கடேசன், உதவிப்பொறியாளர் இளமதி, கோட்டாட்சியர் ஏழுமலை, வட்டாட்சியர் குமரய்யா மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

Tags:    

Similar News