அரியலூரில் சிமெண்ட் ஆலைகளை கண்டித்து ஏர்உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உற்பத்தி விலைக்கே சிமெண்ட் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஏர்உழவர்சங்கத்தினர் அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-10-11 09:10 GMT

அரியலூரில் சிமெண்ட் ஆலைகளை கண்டித்து ஏர் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் அண்ணாசிலையருகே ஏர்உழவர் சங்கத்தின் சார்பில் சிமெண்ட் ஆலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சிமெண்ட் ஆலைகளில் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

நெய்வேலில் மலிவு விலையில் அப்பகுதி மக்களுக்கு மின்சாரம் வழங்குவதுபோல, அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டும் சிமெண்டை உற்பத்தி விலைக்கே மாவட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்.

பழைய காலாவதியான சுரங்கத்தினை ஏரிகளின் மண்ணை எடுத்து பள்ளத்தை நிரப்ப வேண்டும் குருங்காடுகள் வளர்க்க வேண்டும்.

இம்மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்ப்பட்டது.

ஆப்பாட்டத்திற்கு தமிழர் நீதிக்கட்சி மற்றும் ஏர்உழவர் சங்கத்தின் நிறுவன தலைவர் சுபா.இளவரசன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திரளாக சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News