அரியலூரில் வாக்களிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

அரியலூர் 18வது வார்டு வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-19 10:56 GMT

அரியலூர் 18வது வார்டு வாக்குசாவடியில் 72வயதான முதியவர் கலியபெருமாள் வாக்களித்துவிட்டு விட்டு வெளியில் வந்தபோது மயக்கி தரையில் விழுந்தார்.

அரியலூர் 18வது வார்டு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு ஒருமணி நேரம் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டதால் நீண்டநேரம் வரிசையில் நின்று வாக்களித்த முதியவர் வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் காலை 7மணிமுதல் வாக்குப்பதி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18வது வார்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனி வாக்குபதிவு மையங்கள் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 18வது ஆண்கள் வார்டில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் மதியம் 2மணியளவில் பழுது ஏற்பட்டது. 274 ஆண்வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தியிருந்தனர். 275 வாக்காளர் தனது வாக்கை செலுத்தும்போது இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குப்பதிவு அதிகாரிகள் கொடுத்த தகவலையடுத்து மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் நடைபெற்றது.

ஒருமணிநேரம் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டதால் வாக்களிக்க வந்தவர்கள் காத்திருந்து தங்களது வாக்கை செலுத்திவிட்டு சென்றனர். அப்போது வாக்களிக்க காத்திருந்த 72வயதான முதியவர் கலியபெருமாள் வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடியை விட்டு வெளியில் வந்தபோது மயக்கி தரையில் விழுந்தார். இதனையடுத்து அருகில் இருந்த வாக்குச்சாவடி ஊழியர்கள் 18வதுவார்டு மின்நகர் ஜேகேஎம் ரோட்டில் வசிக்கும் முனியன் மகன் கலியபெருமாள்(72) என்பவரை வீல்சேரில் அமரவைத்து முதல்உதவி அளித்தனர். உடனடியாக 108ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கலியபெருமாள் அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் காத்திருந்து வாக்களித்த 72 வயதான முதியவர் வாக்குச்சாவடியில் மயக்கம்அடைந்து தரையில் விழுந்ததால் சிறிதுநேரம் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Tags:    

Similar News