பூத் ஸ்லிப் மட்டுமே போதுமான ஆவணம் அல்ல:அரியலூர் கலெக்டர்

11 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்ய கலெக்டர் தகவல்

Update: 2021-03-25 06:44 GMT

வாக்காளர் தகவல் சீட்டு மட்டுமே போதுமான ஆவணம் அல்ல. 11 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம் என  கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் கலெக்டர் விடுத்துள்ள செய்திகுறிப்பில்,

அரியலூர் மாவட்டத்தில், சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ன்போது வாக்காளர்கள் அனைவருக்கும் புகைப்படவாக்காளர் சீட்டுக்கு (பூத் சிலிப்) பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க தலைமை தேர்தல் அலுவலர்  தெரிவிக்கப்பட்டதன்பேரில்,  நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்காக வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படவுள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி விபரம், வாக்குபதிவு நாள், வாக்குபதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

வாக்குப்பதிவு  தினத்திற்கு 5 நாட்களுக்கு முன்னர் வாக்காளர் தகவல் சீட்டு அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டு விடும். சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் தகவல் சீட்டு மட்டுமே போதுமான ஆவணம் அல்ல.

எனவே, வாக்காளர் அடையாள அட்டை அல்லது  தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஒன்றான பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய, மாநில அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை, வங்கி அல்லது அஞ்சலக மேலாளரால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பில் வழங்கப்பட்ட நேர்த்தி அட்டை, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம் என அரியலூர் மாவட்ட வாக்காளர்களுக்கு  கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.




Tags:    

Similar News