கால்நடைதுறையில் காலி பணியிட வதந்தியை நம்ப வேண்டாம்: ஆட்சியர் வேண்டுகோள்

பொதுமக்கள் எவரும் போலியான இச்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் : அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி.

Update: 2022-06-15 12:50 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் Animal Handler மற்றும் Animal Handler Cum Driver ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு எனவும் சம்பளம் முறையே 15,000/- மற்றும் 18,000/- எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு, 90 மணிநேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும், இதற்கான ஆணை ஜீன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும், விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்திடுமாறும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பணியிடங்கள் நிரப்பப்படும் என தவறான தகவல்கள் புலனம் (Whatsapp) செயலி மூலம் பகிரப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு என புலனம் (Whatsapp) செயலி மூலம் பகிரப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது. பொதுமக்கள் எவரும் போலியான இச்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News