10 சுயேச்சைகள் இணைந்ததால் 2 நகராட்சி 2 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியது

Update: 2022-02-23 05:34 GMT

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியது.

அரியலூர் நகராட்சியில் திமுக மற்றும் அதிமுக தலா 7 இடங்களை வெற்றனர். சுயேச்சை 4 இடங்களில் வெற்றி பெற்றனர். இந்நிலையில் பெரும்பான்மை திமுக, அதிமுகவிற்க்கு இல்லாத நிலை ஏற்ப்பட்டது. இந்நிலையில் அரியலூரில் 3 சுயேச்சைகள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் இணைந்தனர். இதனால் அரியலூர் நகராட்சியை திமுக கைப்பற்றியது.

இதே போல் ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஒரு சுயேச்சை. உடையார்பாளையம் பேரூராட்சியில் 3 சுயேச்சைகள் , வரதராஜன்பேட்டையில் 3 சுயேச்சைகள் திமுகவில் இணைந்ததால் அரியலூர் மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 2 பேரூராட்களை திமுக கைப்பற்றியுள்ளதாக தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் பேரூராட்சி ஜெயங்கொண்டம் நகராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றிய திமுக வரதராஜன்பேட்டை பேரூராட்சி அரியலூர் நகராட்சி சுயேச்சைகள் வெற்றியால் இழுபறியில் இருந்தன. இந்நிலையில் அரியலூர் நகராட்சியில் வெற்றிபெற்ற மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் வெற்றி பெற்ற 3 சுயேச்சை வேட்பாளர்கள் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியது.


Tags:    

Similar News