மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள்: கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலனுக்காக சேவையாற்றிய நிறுவனங்கள், அமைப்புகள், தனிநபர்கள் தமிழக அரசு வழங்கும் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-23 14:00 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி

அரியலூர் மாவட்ட கலெக்டர் .ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :

சுதந்திர தின விழா 2021 அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் , நிறுவனங்களுக்கு தமிழக அரசின் விருதுகள் 15.08.2021 அன்று நடைபெறும் சுதந்திர தின விழா 2021 அன்று தமிழக முதலமைச்சரால் கோட்டை கொத்தளத்தில் வழங்கப்படவுள்ளது.

எனவே அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள்  நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கிட மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்த தொண்டு நிறுவனம் (10 கிராம் தங்க பதக்கம், ரூ.50,000/- ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்), மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்த மருத்துவர் (10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்),

மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாயப்பு அளித்த தனியார் நிறுவனம் (10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்), சிறந்த மத்திய கூட்டுறவு வங்கி (10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்), மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்த சிறந்த சமூக பணியாளர்கள் (10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்), 28.06.2021-க்குள் விண்ணப்பிக்கமாறு அரியலூர் மாவட்ட பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News