அரியலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

அரியலூர் மாவட்டத்தில் 5 கிராமங்களில்நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு மாவட்ட கலெக்டர் அனுமதியளித்துள்ளார்.

Update: 2022-09-24 09:27 GMT

நெல்கொள்முதல் நிலையம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் கரீப் KMS 2022-2023 குறுவை பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு முன்றாம் கட்டமாக அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் குலமாணிக்கம், இலந்தைகூடம், குருவாடி மற்றும் செங்கராயன்கட்டளை ஆகிய கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் சன்னாசிநல்லூர் ஆகிய ஐந்து கிராமங்களில் 24.09.2022 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் 24.09.2022 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயப் பெருமக்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News