தா.பழூர் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

தா.பழூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-04-09 04:59 GMT

மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகள் கோவில்களில் எந்தவிதமான திருவிழாக்களும் நடைபெறாத நிலையில் தற்போது தமிழக அரசு கரோனா விதிமுறைகளை தளர்த்தி உள்ளது. தா.பழூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் ஆலயத்தில் கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கி இன்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதிகளான இடங்கண்ணி, கூத்தங்குடி,தாதம்பேட்டை, சீனிவாசபுரம், சிந்தாமணி, காரைகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News