தூத்தூர் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்தூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி துறை சார்பில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி ஆய்வு செய்தார்.

Update: 2021-12-11 11:42 GMT

தூத்தூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தூத்தூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி ஆய்வு செய்தார்.

மேற்கண்ட ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.13,500 மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டி, பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு வகைகள், 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைக்கும் பணி, ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகம், 14 வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் வாய்க்கால் பணிகள் உள்ளிட்டவைகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், செயற்பொறியாளர் ராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜாகீர்உசேன், செந்தில், ஊராட்சித் தலைவர் காமராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News