பிலாக்குறிச்சி கிராமத்தில் 11 பேருக்கு டெங்கு: 3 பேருக்கு கொரோனா தொற்று

பிலாக்குறிச்சி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காய்ச்சல்,கொரோனா பரிசோதனையை சுகாதாரதுறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2021-08-10 07:47 GMT

பிலாக்குறிச்சி கிராமத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதார துறையினர்.


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள பிலாக்குறிச்சி கிராமத்தில் மேலத்தெருவில் வசிக்கும் 39 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்ததில், 11 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 3 பேருக்கும் கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து சுகாதார துறையினர் பிலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்துறைவட்டார மருத்துவ அலுவலர் ரேவதி தலைமையில் 10 கொண்ட மருத்துவகுழுவினர் முகாமிட்டு பிலாக்குறிச்சி கிராமத்தில் வீடுவீடாக சென்று பொதுமக்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் டெங்கு பரவாமல் தடுக்கும் விதமாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் வீடு வீடாக சென்று வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளதா என கண்டறிந்து அதனை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே கிராமத்தில் பலருக்கும் டெங்கு மற்றும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது செந்துறை வட்டாரத்தில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News