மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு மின் கட்டண உயர்வை வாபஸ்பெறக்கோரி ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-07-22 10:55 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

தமிழக அரசு அண்மையில் உயர்த்திய மின்கட்டண உயர்வால் ஏழை எளிய பொதுமக்களும் விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்படுபவர். எனவே தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். விவசாய மின் இணைப்புக்கு வழங்கப்படும் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் தொடர்ந்து பயிர்களுக்கு தண்ணீர் விட முடியாத நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிரிடப்பட்டுள்ள மாணவர் பெயர்கள் நீரின்றி காய்ந்து போகின்றது. எனவே தடை இன்றி விவசாய மின்சாரத்தை வழங்க வேண்டும்.

மேலும் தற்பொழுது குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் குறுவை சாகுபடி திட்டத்தை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும் தடை இன்றி யூரியா  வழங்கவேண்டும்  என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News