அரியலூர்: மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பள்ளி மாணவ மாணவிகளுக்கு இணைய மிரட்டல், சைபர் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-03-18 12:30 GMT

அரியலூரில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இணைய மிரட்டல், சைபர் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. 

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின்படியும், காவல் கூடுதல் கண்காணிப்பாளர திருமேனி அறிவுரைப்படியும் இன்று அரியலூர் நகரில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி மாணவ மாணவிகளுக்கு மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்கள் சிவனேசன் (தொழில்நுட்ப பிரிவு) தலைமையில் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில், இணைய விளையாட்டில் அடிமையாவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் செல்போன்களை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், சமூக வலைதள பக்கங்களில் தனிப்பட்ட தகவல்கள், தனது புகைப்படம் மற்றும் தவறான பதிவுகளை மற்றவர்களுக்கு அனுப்பவும் கூடாது எனவும், தனது புகைப்படத்தை பதிவு கூடாது என்றும், மேலும் பாதுகாப்பான முறையில் பதிவிட வேண்டும் என்றும், இணையதளத்தில் எவரேனும் இணைய மிரட்டல் செய்தால், இணைய பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 இதற்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு விழிப்புணர்வு செய்தனர். சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க www.cybercrime.gov.in இந்த இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

Tags:    

Similar News