வாக்கு எண்ணும் மையம் செல்ல கொரோனா முடிவு, செய்தியாளர்களுக்கும் அவசியம்

கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்கும் செய்தியாளர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப் படுகின்றனர்.

Update: 2021-04-28 06:06 GMT

அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்கு எண்ணும் நிகழ்வில் பங்கேற்கும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை அடையாள அட்டை வழங்கப்பட்டு, வாக்கு எண்ணும் நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என உத்திரவிடப்பட்டுள்ளது.

எனவே செய்தியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 29.04.21 மற்றும் 30.04.21 ஆகிய தினங்களில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் காலை 9.00 மணிமுதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாம்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகளும் நடைபெற உள்ளது.

தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே வாக்கு எண்ணும் நிகழ்வில் பங்கேற்கும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பித்து, தங்களுக்குரிய அடையாள அட்டைகளை பெற்று வாக்கு எண்ணும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) பாரதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News