புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க அலுவலர்கள் எண் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க அலுவலர்கள் எண்ணை கலெக்டர் அறிவித்தார்.

Update: 2021-05-07 04:20 GMT

கொரோனா - 19 வைரஸ் நோய் தொற்று இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவுவதால் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாடு மாநிலத்தை விட்டு அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வித பிரச்சினைகள் இன்றி தங்குவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் புகார் குறைகளை தீர்ப்பதற்காக, மாவட்ட அளவில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தொலைபேசி எண் மற்றும் உறுப்பினர்களின் தொலைபேசி எண்ணுடன் கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவி மையம் அமைத்திட சென்னை தொழிலாளர் ஆணையர் அவர்கள் உத்தவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் திரு.பாலசுப்ரமணியன் அவர்களும் மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் திரு.தர்மசீலன் அவர்களும் அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.

மேலும் இம்மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலர், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) கு.விமலா தொலைபேசி எண்.9942832724 மற்றும் குழு உறுப்பினர்கள் தொழிலாளர் உதவி ஆய்வாளர் இரா.குருநாதன் தொலைபேசி எண்.9629494492, முத்திரை ஆய்வாளர் ராஜா தொலைபேசி எண்.7904250037 ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு புகார்களை தெரிவிக்கலாம். மேலும் பெறப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News