அரியலூர் மாவட்டத்தில் இன்று 46 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 46பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 273பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Update: 2021-04-23 15:49 GMT

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 13பேர். இன்றுவரை 5280 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 4956 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 51பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1003 பேர். இதுவரை 1,55,375 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 5280 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,50,095 பேர். அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 7822, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 3,82,827 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள்21,552 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 748 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 20675 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 129 பேர்.

கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 786 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 346 பேரும், இரண்டாவது தடுப்பூசியை 440 பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்.

முகக்கவசம் அணிவோம்! சமூக இடைவெளி கடைபிடிப்போம்!! கொரோனாவை தடுப்போம்!!!

Tags:    

Similar News