கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு நிவாரண உதவி

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு, நிவாரண உதவிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

Update: 2021-10-30 04:43 GMT

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொரோனாவால்  இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு, நிதி உதவித்தொகைகளை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் தாய், தந்தை மற்றும் இருவரையும் இழந்த வாரிசுதாரர்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்யும் வகையில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு,  நிவாரண உதவிகள் வழங்க, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், முதல் தவணையாக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொரோனா பெருந்தொற்றால் இறந்தவர்களின் வாரிசுதாரர்களான 9 நபர்களுக்கு,  தலா ரூ.3 இலட்சம் வீதம் ரூ.27 இலட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

மேலும், கொரோனா பெருந்தொற்றால் தாய், தந்தையரை இழந்தவர்களுக்கு, அரசால் வழங்கப்படும் இந்நிதியை, குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்திடும் வகையில் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என, கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ச.துரைமுருகன், பாதுகாப்பு அலுவலர்கள் செல்வலெட்சுமி, செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News