கொரோனா உளவியல் ரீதியான ஆலோசனை வழங்குவதற்காக உதவி எண் அறிவிப்பு, கலெக்டர் ரத்னா தகவல்

கொரோனா உளவியல் ரீதியான ஆலோசனை வழங்குவதற்காக உதவி எண்அறிவிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.

Update: 2021-06-15 15:27 GMT

கலெக்டர் ரத்னா (பைல் படம்)

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய, மற்றும் மாநில அரசுகளால் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில், கொரோனா வைரஸ் நோய் குறித்த சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) உடன் இணைந்து இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், கோவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உளவியல் ரீதியான ஆலோசனை வழங்குவதற்காக உதவி எண்.80-46110007 (Helpline Number) வழங்கியுள்ளது.

இச்சேவை தமிழ் உட்பட 12 பிராந்திய மொழிகளில் செயல்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News