நெற்றியில் நாமம் போட்டு ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Protest News -தினக்கூலியை உயர்த்தி வழங்கக் கோரி நெற்றியில் நாமம் இட்டு அரியலூரில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2022-09-28 07:17 GMT

தினக்கூலியை உயர்த்தி வழங்கக் கோரி நெற்றியில் நாமம் இட்டு அரியலூரில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Protest News -அரியலூர் - ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கவில்லை எனவும் தினக்கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் நெற்றியில் நாமம் போட்டு ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு பொது சுகாதார பணியில் ஈடுபட்டு வரும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெற்றியில் நாமமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து கடந்த ஆண்டு நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது நிறைவேற்றப்படும் என நகராட்சி நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்த நிலையில், இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. நிரந்தர துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த 13 வருடங்களாக சேமநல நிதி வட்டியுடன் கூடிய இருப்பு கணக்கு கொடுக்கப்படவில்லை.

மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட தின கூலி ஊதியத்தை 27 மாதமாக வழங்கப்படவில்லை. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 500 ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அரியலூர் மாவட்டத்தில் மட்டும் மிகக் குறைந்த 307ரூபாயே ஊதியமாக வழங்கப்படுகிறது. மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணியின் போது வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை.

எனவே நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரியலூர் நகராட்சி நிர்வாகம் உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட நேரிடும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News