உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் இடம் பங்கீடு-திருமாவளவன் பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தொல். திருமாவளவன் கூறினார்.

Update: 2021-09-16 12:45 GMT

மாணவி கனிமொழியின் வீட்டிற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கனிமொழியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி கனிமொழியின் வீட்டிற்கு  சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கனிமொழியின் உருவப்படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறிய திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒருலட்சம் ரூபாய் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  தொல்.திருமாவளவன், மத்திய அரசு வறட்டு பிடிவாதம் பிடிக்காமல் தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட மசோதாவை உடனடியாக சட்டமாக்கும் வகையில் ஒப்புதல் அளிக்க வேண்டும். காலம் தாழ்த்த கூடாது. நீட் மசோதாவிற்க்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், தமிழ்நாட்டில் ஜல்லிகட்டைபோல், பறந்துபட்ட பொதுமக்களின் போராட்டமாக இது வெடிக்கும். அந்த நிலைக்கு மத்திய அரசு செல்லாது என நம்புறேன். நீட் விலக்கு மசோதோவை குடியரசு தலைவர் உடனே கையெழுத்து இட்டு அனுமதி வேண்டும் என்றார்..

மேலும் அ.தி.மு.க. நீட் விஷயத்தில் பெயர் அளவிற்கு, ஒப்புக்கு தீர்மானம் நிறைவேற்றியது. அவர்கள் நினைத்திருந்தால் மத்திய அரசுடன் கூட்டணி இருந்த நிலையில் நீட்டுக்கு விலக்கு பெற்றிருக்கலாம். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்  மாவட்ட அளவில் உள்ள பொறுப்பாளர்கள் மட்டத்தில் கூட்டணியில் எந்தந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது என்றும் திருமாவளவன் கூறினார்.

Tags:    

Similar News