காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேசஒற்றுமை நடைபயணம் : அரியலூரில் விளக்க கூட்டம்

காமராஜர் சிலையில் இருந்து புறப்பட்டு நகரின் பல பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர்

Update: 2022-09-04 14:52 GMT

அரியலூரில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டும்,  நிதியுதவி பெறும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 7ம்தேதி கன்னியாகுமரியில் இருந்து தேச ஒற்றுமை நடை பயணம் துவக்க உள்ளார்.இந்நிகழ்விற்கு பொதுமக்களிடம் ஆதரவு கேட்டும், பொதுமக்களிடமிருந்து நிதியுதவி பெறும் நிகழ்ச்சி அரியலூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர் தலைமை  வகித்தார். வட்டாரத் தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் அமானுல்லா, மாவட்ட செயலாளர் பாலசிவகுமார், மாமு சிவக்குமார், மாவட்ட செயலாளர் ஜி.செந்தில்குமார், தொழிற்சங்க செயலாளர் ஜே பி ராஜா, மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், நகர செயலாளர் ஆண்டனிதாஸ், நகர பொருளாளர் சங்கர், வார்டு தலைவர்கள் ரமேஷ், ரவி, கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி நிதி பெற்றனர்.

காமராஜர் சிலையில் இருந்து புறப்பட்டு மார்க்கெட் தெரு, மங்காய் பிள்ளையார்கோவில் தெரு, வெள்ளாளர் தெரு, சின்னகடைவீதி உள்ளிட்ட நகரின் பலப்பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.முன்னதாக அரியலூர் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள காந்தி, காமராஜர் சிலைகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேச ஒற்றுமை நடைபயணம் குறித்து விளக்ககூட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News