அரியலூர்:நெல்கொள்முதல் தொடர்பாக புகார் தெரிவிக்க கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர்மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்கள் குறித்தபுகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2021-09-23 14:01 GMT

நேரடி நெல்கொள்முதல் நிலையம் (பைல்படம்)




அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டில் கரீப் சாகுபடி மூன்றாம் பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஐந்து கட்டங்களாக, உடையார்பாளையம் வட்டத்தில்,ஸ்ரீபுரந்தான், முட்டுவாஞ்சேரி, காரைக்குறிச்சி, கோடாலிகருப்பூர், அரியலூர் வட்டத்தில், தூத்தூர், குருவாடி மற்றும் செந்துறை வட்டத்தில், குழுமூர், தளவாய்கூடலூர், சன்னாசிநல்லூர் ஆகிய 09 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.1077 மற்றும் அரியலூர் மாவட்ட வழங்கல் அலுவலரின் தொலைபேசி எண்.9445796402 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். அப்புகார்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News