கம்யூனிஸ்ட் பிரமுகர் கொலையை கண்டித்து அரியலூரில் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம் கம்யூனிஸ்ட் பிரமுகர் கொலையை கண்டித்து அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-11-17 17:13 GMT

கம்யூனிஸ்ட் பிரமுகர் படுகொலையை கண்டித்து அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் சமீபத்தில் நீடாமங்கலம் கடைவீதியில் பட்டப்பகலில் சமூக விரோத கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை செயலை கண்டித்தும், படுகொலைக்கு காரணமானவர்கள் யார், யாரெல்லாம் என்பதை கண்டறிந்து எவரும் தப்பித்து விடாமல் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க கூடிய வகையில் தமிழக அரசும், தமிழக காவல்துறையும் உறுதியான செயல்பாட்டை தடம் புரளாமல் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மாவட்ட தலைநகர் அரியலூரில் அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளரும் ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளருமான டி. தண்டபாணி தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஆர் .தனசிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கே. காசிநாதன், அரியலூர் நகராட்சி ஏ.ஐ.டி.யு.சி. கு. சிவஞானம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் நகர கிளை, அரியலூர் நகராட்சி ஏ.ஐ.டி.யூ.சி. சுகாதார தொழிலாளர்கள், அரியலூர் நகர சாலையோரத்து வியாபார சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News