ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாக்க கோரி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வேலைவாய்ப்புதிட்டத்தை 200நாட்களாக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-08-01 15:15 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்செயலாளர் உலகநாதன் மற்றும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 200 நாட்களாக்க வேண்டும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை நகரங்களில் செயல்படுத்த வேண்டும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு வழங்கப்படும் ஊதியத்தை 600ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும், கிராமப்புறங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News