அரியலூர்: 61 குழந்தைகளுக்கு கலெக்டர் ரூ.2.44 லட்சம் நிதியுதவி

61 குழந்தைகளுக்கு ரூ.2.44 இலட்சம் மதிப்பில் நிதியுதவித் தொகைகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

Update: 2022-01-21 10:55 GMT

அரியலூர்  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் 61 குழந்தைகளுக்கு ரூ.2.44 இலட்சம் மதிப்பில் நிதியுதவித் தொகைகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.


அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் தாய், தந்தை மற்றும் தந்தையை இழந்து நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த 61 குழந்தைகளுக்கு  தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் மாநில அரசின் முழு பங்களிப்புடன் ரூ.2000 வீதம் 2021 அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய 2 மாதங்களுக்கு ரூ.2.44 இலட்சம் நிதியுதவித் தொகை இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கப்பட்டது.

இந்நிதியுதவித் தொகை குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு பயன்பெறும். இதனை சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அல்லது காப்பாளர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ச.துரைமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News